SriramKannan77's Categories

SriramKannan77's Authors

Latest Saves

#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.


இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை

இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்

என்றதும் சமாதானம் அடைந்தார். அதே போன்று சீதையை ராவணன் அபகரித்து சென்றான் என்று கேட்டவுடன் திரும்பப் படையை திரட்டி கடற்கரை சென்று கடலை கடக்க ஆயத்தமானார். அப்பொழுது இராமபிரானே சீதா தேவியுடன் தோன்றி அவருக்குக் காட்சி அளித்து அவரை சமாதனப் படுத்தினார். கவலையில் ஆழ்ந்த அமைச்சர்கள் கூடி


இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என ஆலோசித்து இதற்கெல்லாம் வைணவ அடியாரோடு இவர் கொண்டிருக்கும் தொடர்பே காரணம் என்ற முடிவிற்கு வந்தனர். தொடர்பைத் துண்டிக்க ஓர் திட்டமும் தீட்டினர். அரண்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப் பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான
மாசிப் புனர்பூசம் காண்மினின்று மண்ணுலகீர் *
தேசித்திவசத்துக்கேதென்னில்* * பேசுகின்றேன்
கொல்லிநகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்*
நல்லவர்கள் கொண்டாடும்நாள்.

மாசி ௴ புனர்வஸு திருநக்ஷத்ரத்திரம்.
இந்நாளுக்கு என்ன மதிப்பு
என்றால் கேண்மின்.


குலசேகராழ்வாருடைய திருவவதாரம் காரணமாக ஸத்துக்கள் சிலாகிக்கும் நாளாமிது என்றருளிச் செய்கிறார் மணவாளமாமுனிகள்.

சேரநாட்டில் திருவஞ்சிக் களத்தில் கௌஸ்துபம் அம்ஸமாய் அவதரித்த குலத்துக்கே சிறப்புத் தரும் குலசேகராழ்வார்,

"கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ"
என்பதற்கிணங்க,

மனத்துக்கினியனான
ஸ்ரீ ராமபிரானின் வ்ருத்தாந்தத்தைக் கேட்டு பெருமாளிடமுள்ள ப்ரேமாதிசயத்தாலே கலங்கி,

நல்லார்கள் வாழும் நளிரரங்கமாகிற திருவரங்கம் திருப்பதி சென்று திருக்காவேரி திரைக்கையால் அடிவருடத் திருவனந்தாழ்வான் மேல் திருப்பள்ளிகொண்ட திருமேனி
அம்மானைக் கண்ணாரக்கண்டு
வாயாரப் புகழ்ந்து அநுபவித்து

அவ்வநுபவ பரீவாஹ ரூபமாகப்
பெருமாள் திருமொழி என்கிற திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து இவ்வுலகை வாழ்வித்தருளினார்.

வாழி திருநாமம்
அஞ்சனமா மலைப்பிறவி
யாதரித்தோன் வாழியே

அணியரங்கர் மணத்தூணை
யடைந்துய்ந்தோன் வாழியே
#எம்பெருமானார்_தரிசனம்

#குலசேகராழ்வார்

#பெருமாள்_திருமொழி

#ஸ்ரீவைணவ_ஆசாரியர்கள் அருளிய

#ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களின் பொருளமுதத்தில்

தீஞ்சுவை அமுதத் துளிகள்!

🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯

"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே" என்றும் "படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே" என்றும் நாடு நகரமும் நன்கறிய முழங்கிய எங்கள் குலசேகரனின் திருநட்சத்திரம் இன்று. நல்லவர்கள் கொண்டாடும் நாள்!


ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் உரைகள் ஆழ்வார்களின் ஒவ்வொரு சொல்லிலும் பெரிதும் ஈடுபட்டு விளைந்தவை.

தெய்வீகச் சம்பவங்களில் கூட உரைகள் தோன்றியுள்ளன என்பதற்குச் சில சான்றுகள்!

வாரீர்! பெருமாள் திருமொழியில் உள்ள சில வரிகளுக்கு நம் ஆசாரியர்கள் அருளிய பொருட்சுவையைச் சுவைப்போம்!

6ம் திருமொழி 8ம் பாசுரம்

ஸ்ரீ குலசேகராழ்வார் ஸ்ரீ இராமபிரான் மீது பற்று உடையவர் என்பது பலரும் அறிந்ததே ஆனால் அவர் ஸ்ரீ கண்ணபிரானையும் பாடியுள்ளார்.

இப்பதிகம் ஸ்ரீ கண்ணபிரானுடன் பல கோபிகைகள் ஊடல் கோபத்துடன் பேசுவதாக நாயகி மனோபாவத்தில் அமைந்துள்ளது!

இப்பாசுரத்தின் பொருள்:

'என்னை ஒரு இடத்திற்கு வரச்சொல்லி, முல்லைப்பந்தலில் பதுங்கியிருந்த இன்னொரு கோபிகையுடன் கூடியிருக்கப் போகும்பொழுது எனைக் கண்டு, உன் பீதகவாடையைப் பிடித்துக்கொண்டு இல்லாத பொய் அச்சத்துடன் ஓடினாய். என்றாவது என்னைக் காண வருவாய்.
குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி

தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்

மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்

அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே.

(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை - மூன்றாந் திருமொழி)


Meaning:

ஸ்ரீராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது,

வாநர வீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து, கடலைத் தூர்ப்பதைக் கண்ட சில அணிற்பிள்ளைகள்,

"இவ்வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே தொண்டு செய்தால்,

நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறிது தொண்டு செய்வோம்" என்றெண்ணினவாம்.

உடனே, எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது, உடனே அந்த ஈரவுடம்போடே, கரை மேல் மணலில் புரண்டு, உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலே கொண்டு உதறுவதாய் இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே,

ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவி புரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு;

அதனை அருளிச் செய்கிறார் ஆழ்வார் முன் இரண்டடிகளில்.

"அம்மாதிரி வாநரங்கள் போலவும், அணிற்பிள்ளைகள் போலவும், சரீர ச்ரமப்பட்டு ஒரு கைங்கரியமும் செய்யமுடியாமற் போயினும்,

நெஞ்சாலேயாவது எம்பெருமானை நினைத்து, அவ்வழியாலே பகவத் கைங்கர்யபரர்களில் ஒருவனாக நிற்கலாமே;
அனைவராலும் “ஆறு வார்த்தைகள்” என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) நம்பிகள் வாயிலாக இளையாழ்வாருக்கு அனுக்கிரஹித்தருளினார். அவைகள்:

1.அஹமேவ பரம் தத்வம் – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்


2.தர்சனம் பேத ஏவ – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)

3.உபாயம் ப்ரபத்தி – “என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.

4.அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன். (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு )

காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆசார்யரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்

5.தேஹாவஸானே முக்தி – சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்