மாசிப் புனர்பூசம் காண்மினின்று மண்ணுலகீர் *
தேசித்திவசத்துக்கேதென்னில்* * பேசுகின்றேன்
கொல்லிநகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்*
நல்லவர்கள் கொண்டாடும்நாள்.
மாசி ௴ புனர்வஸு திருநக்ஷத்ரத்திரம்.
இந்நாளுக்கு என்ன மதிப்பு
என்றால் கேண்மின்.
குலசேகராழ்வாருடைய திருவவதாரம் காரணமாக ஸத்துக்கள் சிலாகிக்கும் நாளாமிது என்றருளிச் செய்கிறார் மணவாளமாமுனிகள்.
சேரநாட்டில் திருவஞ்சிக் களத்தில் கௌஸ்துபம் அம்ஸமாய் அவதரித்த குலத்துக்கே சிறப்புத் தரும் குலசேகராழ்வார்,
"கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ"
என்பதற்கிணங்க,
மனத்துக்கினியனான
ஸ்ரீ ராமபிரானின் வ்ருத்தாந்தத்தைக் கேட்டு பெருமாளிடமுள்ள ப்ரேமாதிசயத்தாலே கலங்கி,
நல்லார்கள் வாழும் நளிரரங்கமாகிற திருவரங்கம் திருப்பதி சென்று திருக்காவேரி திரைக்கையால் அடிவருடத் திருவனந்தாழ்வான் மேல் திருப்பள்ளிகொண்ட திருமேனி
அம்மானைக் கண்ணாரக்கண்டு
வாயாரப் புகழ்ந்து அநுபவித்து
அவ்வநுபவ பரீவாஹ ரூபமாகப்
பெருமாள் திருமொழி என்கிற திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து இவ்வுலகை வாழ்வித்தருளினார்.
வாழி திருநாமம்
அஞ்சனமா மலைப்பிறவி
யாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை
யடைந்துய்ந்தோன் வாழியே