Anexcommie's Categories

Anexcommie's Authors

Latest Saves

ராவணனை அழித்த பிறகு,போர்க்களத்தில் ஸ்ரீ ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்...!!

அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது...!!
அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்,
அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை,

ஸ்ரீராமபிரான்... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!!


உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

“நீ யாரம்மா?” என்றார்....!!
“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!!

என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!
ஆனால்,
அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால்,

அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்....!!

மேலும்.
சத்திரிய குல தர்மப்படி,
கணவனை_இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் ,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.....!!

ஆனால் நீ என்னிடம் வரவில்லை....!!
ஆச்சரியப்பட்டேன்.....!!

இங்கே நீ ,
என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்......!

என் கணவரிடம் கூட இத்தகைய பண்பு இல்லை

ரகு குலத்தில் உதித்த ராமன் ,
மனிதன் அல்ல.....!!
உலகைக் காக்கும் பரம்பொருள்...!!
விஸ்வரூபன்.....!!
அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது.....!!
அவன் வேதத்தின் சாரம்.....!!

ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்....!!

அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்.....!!

அவர் கேட்கவில்லை.....!!
உன் வெற்றிக்கு காரணம்,
என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்....!!

அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை.....!!
அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.....!!
ஒரு பிரம்மச்சாரி திருமணதிற்கு பணம் வேண்டி ஊரில் பலரிடம் கேட்டு கிடைக்காததால் #சுவாமிதேசிகர் இடம் கேட்க, அவர் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வேண்டி அருளியது #ஸ்ரீஸ்துதி இது போல் #ஆதிசங்கரர் ஒரு ஏழை பெண்மணிக்கு #கனகதாராஸ்தோத்திரம் மூலம் அனுக்கிரகம் செய்துள்ளார். இருவருமே அந்தத் தங்கக்


காசுகளை கையாலும் தொடாமல் உதவி கேட்டு வந்தவருக்கும், மிக ஏழ்மை நிலையில் உஞ்சவிருத்திக்கு போட ஒரு நெல் மணி கூட இல்லாதவருக்கும் மனம் இரங்கி செல்வம் கிடைக்க அருளினார்கள். வந்தனா அனுக்கிரகம் இது. நமக்காக எழுதிய ஸ்துதிகள் இவை. அவர்களுக்கு இதன் தேவை கிடையாது. தமக்கென்று திரவியமே வைத்து்

கொள்ளாமல் யாசகம் எடுத்து ஜீவித்து வந்தவர் #வேதாந்ததேசிகர் பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்களும் இருப்பார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள்

“ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்று போற்றப்படுபவர் தேசிகர், அதாவது வெளி உதவி எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக்கூடியவராக இருப்பவருக்கு இந்தப் பட்டம் அருளப்படும். அவருக்கு இது பொருந்தாது என உலகுக்குக் காட்டி அவரை அவமானப்படுத்து வேண்டும் என அவர் விரோதிகள் நினைத்து சூழ்ச்சி செய்தனர்

பரம ஏழையான ஓர் அந்தணன் பணம் இல்லாததால் திருமணமே ஆகாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தேசிகரின் விரோதிகள் அவனிடம் தேசிகரிடம் சென்று திருமணம் நடக்க பண உதவி கேட்க சொன்னார்கள். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திர’ என்பதால் இவனுக்காக அவர் பிறரிடம் யாசிக்க முடியாது. இவரால் பணம் கொடுக்க முடியாமல்