ஒரு பிரம்மச்சாரி திருமணதிற்கு பணம் வேண்டி ஊரில் பலரிடம் கேட்டு கிடைக்காததால் #சுவாமிதேசிகர் இடம் கேட்க, அவர் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வேண்டி அருளியது #ஸ்ரீஸ்துதி இது போல் #ஆதிசங்கரர் ஒரு ஏழை பெண்மணிக்கு #கனகதாராஸ்தோத்திரம் மூலம் அனுக்கிரகம் செய்துள்ளார். இருவருமே அந்தத் தங்கக்

காசுகளை கையாலும் தொடாமல் உதவி கேட்டு வந்தவருக்கும், மிக ஏழ்மை நிலையில் உஞ்சவிருத்திக்கு போட ஒரு நெல் மணி கூட இல்லாதவருக்கும் மனம் இரங்கி செல்வம் கிடைக்க அருளினார்கள். வந்தனா அனுக்கிரகம் இது. நமக்காக எழுதிய ஸ்துதிகள் இவை. அவர்களுக்கு இதன் தேவை கிடையாது. தமக்கென்று திரவியமே வைத்து்
கொள்ளாமல் யாசகம் எடுத்து ஜீவித்து வந்தவர் #வேதாந்ததேசிகர் பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்களும் இருப்பார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள்
“ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்று போற்றப்படுபவர் தேசிகர், அதாவது வெளி உதவி எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக்கூடியவராக இருப்பவருக்கு இந்தப் பட்டம் அருளப்படும். அவருக்கு இது பொருந்தாது என உலகுக்குக் காட்டி அவரை அவமானப்படுத்து வேண்டும் என அவர் விரோதிகள் நினைத்து சூழ்ச்சி செய்தனர்
பரம ஏழையான ஓர் அந்தணன் பணம் இல்லாததால் திருமணமே ஆகாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தேசிகரின் விரோதிகள் அவனிடம் தேசிகரிடம் சென்று திருமணம் நடக்க பண உதவி கேட்க சொன்னார்கள். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திர’ என்பதால் இவனுக்காக அவர் பிறரிடம் யாசிக்க முடியாது. இவரால் பணம் கொடுக்க முடியாமல்
போகும்போது அவரை அவமானப் படுத்த திட்டம் போட்டனர். தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்து விட்டது. ஆயினும் அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடம் கருணை கொண்டார். வெள்ளிக்கிழமையான நாளை காலை காஞ்சி பெருந்தேவித் தாயார் சந்நதிக்கு வா என்று சொல்லி அனுப்பினார். ஏழையும், தேசிகரும்
கோவிலுக்குச் செல்வதை அறிந்த மக்களும் ஆலயத்தில் திரண்டனர். பெருந்தேவித் தாயாரான மஹாலட்சுமியை மனமுருக வேண்டி, ஒரு ‘ஸ்துதி’ செய்தார். அதுவே, உத்தமமான #ஸ்ரீஸ்துதிஸ்தோத்திரம். உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மச்சாரிக்கு கொடுத்தார். விரோதிகளால், பெரியவர்களுக்குக் கடைசியில் மேலும்
மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று. தேசிகர் திருமகள் அருள் பெறவேண்டி “ஸ்ரீஸ்துதி’’ என்னும் 25 ஸ்லோகங்களை, கொண்ட ஸ்தோத்திரத்தை ராகத்துடன் பாடினார். 21 வது ஸ்லோகத்தை சொல்லும் பொழுது திருமகளும் தங்கக்காசுகளை அள்ளிக் கொடுத்தாள். எனவே திருமணம் போன்ற
சுபநிகழ்ச்சிகளுக்கு பணத்தடை ஏற்பட்டாலோ, தினமும் கையில் பணம் புழங்கவும் ஸ்ரீஸ்துதியின் 21-வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வது நல்லது.
ஸானுப்ராஸ ப்ரகடித தயை
ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தை:
அம்ப! ஸ்நிக்தைர் அம்ருத லஹரீ
ளப்த ஸப்ரஸ்மசர்யை:
ங்கர்மே தாபத்ரய விரசிதே
காட தப்தம் ணம் மாம்
ஆகிஞ்சன்ய
க்லபிதம் அங்கைர்
ஆத்ரியேதா கடாசை
- இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் அதன் பொருளைச் சொல்லலாம்.
கருணை மிக்க லட்சமி தாயே! தாயன்பைத் தருபவளே! பக்தர்களுக்கு துணை செய்பவளே! அமிர்தம் போல் குளிர்ச்சிமிக்கதும், பரிசுத்தமானதுமான அருளைத் தருபவளே கடும் வெயிலில் நடப்பவன் தாகத்தால் தவிப்பது போல
பொருளில்லாமல் வாடும் என்னை ஒரு கணநேரம் உன் கடைக்கண் பார்வையால் குளிரச் செய்வாயாக!
இந்த ஸ்தோத்திரத்தை கற்றுக் கொள்ளவோ அல்லது கேட்டு பயனடையவோ இந்த லிங்க் உதவும். https://t.co/JWKtch51eU
கவி-தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே!
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:!!

More from அன்பெழில்

#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.


இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை

இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்

என்றதும் சமாதானம் அடைந்தார். அதே போன்று சீதையை ராவணன் அபகரித்து சென்றான் என்று கேட்டவுடன் திரும்பப் படையை திரட்டி கடற்கரை சென்று கடலை கடக்க ஆயத்தமானார். அப்பொழுது இராமபிரானே சீதா தேவியுடன் தோன்றி அவருக்குக் காட்சி அளித்து அவரை சமாதனப் படுத்தினார். கவலையில் ஆழ்ந்த அமைச்சர்கள் கூடி


இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என ஆலோசித்து இதற்கெல்லாம் வைணவ அடியாரோடு இவர் கொண்டிருக்கும் தொடர்பே காரணம் என்ற முடிவிற்கு வந்தனர். தொடர்பைத் துண்டிக்க ஓர் திட்டமும் தீட்டினர். அரண்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப் பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான
#மஹாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்


உள்ளது. அப்போ பொண்ணப் பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம்

பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள். தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.
ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானம்

ஆகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது. ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண் குழந்தையை

பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்து விடுகிறான். பெண்ணைப் பெற்ற தந்தைக்கு? தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள், பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்,
தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள், நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு
மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி
#திருநீரும்_ருத்திராட்சமும்
ஒரு ஊரில் இருந்த ஒரு திருடன், அவன் திருடாத இடமே இல்லை என்று மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர். அவன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம் என


அறிவித்தார். சில நாட்கள் கழித்து அந்த அரசர், யார் பற்று இல்லாமல் இருகிறார்களோ அவருக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என அறிவித்தார். பின் மந்திரியிடம் நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிப் பார்த்து அழைத்து வாரும் என ஆணையிட்டார். மந்திரி தேடி செல்லும்

போது இந்த திருடன் அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டான். மந்திரி ஒரு சூழ்ச்சி செய்தான். உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூறியுள்ளார். நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகிறேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கிறேன் என உறுதி அளித்தான். சரி என இந்த திருடனும்

சம்மதித்தான். அந்த திருடனுக்கு
திருநீறும் ருத்ராட்சமும் அணிவித்து ஒரு சன்யாசி போல் வேடமிட்டான் மந்திரி. பின் அவனிடம், நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இரு. ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல், கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை

வாங்கி என்னிடம் தா, நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன் என சொன்னான். பின் அந்த மந்திரி, ராஜாவிடம் சென்று, பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்துள்ள ஒரு சன்யாசியை கண்டுள்ளேன். அவரை தரிசித்து தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள் என்றான். அரசர் சென்று மரத்தடியில் இருந்த

More from All

ChatGPT is a phenomenal AI Tool.

But don't limit yourself to just ChatGPT.

Here're 8 AI-powered tools you should try in 2023:

1. KaiberAI

@KaiberAI helps you generate beautiful videos in minutes.

Transform your ideas into the visual stories of your dreams with this Amazing Tool.

New features:
1. Upload your custom music
2. Prompt Templates
3. Camera Movements:

Check here

https://t.co/ivnDRf628L


2. @tldview TLDV

Best ChatGPT Alternative for meetings.

Make your meetings 10X more productive with this amazing tool.

Try it now:

https://t.co/vOy3sS4QfJ


3. ComposeAI

Use ComposeAI for generating any text using AI.

It’s will help you write better content in seconds.

Try it here:

https://t.co/ksj5aop5ZI


4. Browser AI

Use this AI tool to extract and monitor data from any website.

Train a robot in 2 minutes to do your work.

No coding required.

https://t.co/nNiawtUMyO

You May Also Like