கேள்வி : ஹிந்து மதம் என்று உண்டா?
பதில் : உண்டு (1/11) @thangapushpam03 @dineshavin @JSKGopi

கேள்வி : ஹிந்து மதம் என்ற பெயர் யார் வைத்தார்கள்?
பதில் : ஹிந்து மதத்திற்குப் பெயர் கிடையாது. சனாதன மதம் (மிகவும் பழமை வாய்ந்த என்று பொருள்.) (2/11)
கேள்வி : பின் ஏன் ஹிந்து மதம் என்று அழைக்கப்படுகிறது?
பதில் : நாம் சிந்து நதிக்கு இப்புறம் வாழ்வதால் நம்மைச் சிந்துக்கள் என்று அழைத்து வந்தனர். இதுவே பரிணாம வளர்ச்சியாலும் பரிபாஷையாலும் பிற்காலத்தில் ஹிந்து என்று மாறிற்று. (காஞ்சி மகாபெரியவர் சொன்னது ) (3/11)
கேள்வி : ஹிந்து மதத்தின் ஸ்தாபகர் யார்?
பதில் : வேத வ்யாஸர் (4/11)
கேள்வி : எதற்காக ஹிந்து மதம் நிறுவப்பட்டது?
பதில் : எந்த மதமும் இரு விஷயங்களை மக்களுக்கு உணர்த்தத் தோண்டிற்று. அதே இவ்விரு விஷயத்தைச் சொன்ன முதல் மதம் ஹிந்து மதம். பிரயோஜனம் அற்ற ஆனால் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயத்தைச் சொல்வதற்கு மதம் தேவையில்லை. (5/11)
கேள்வி : அந்த இரண்டு விஷயம் என்ன ?
பதில் :
1.தர்மம் - (எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது),
a.தர்மத்தை வேதம் என்கிற சாஸ்திரத்தால் தெரிந்துகொள்ளவேண்டும்.
2.பரம்பொருளை உணருதல் - சாஸ்திரம் சொன்ன படி தர்மத்தை அனுசரித்து எவன் நேர்மையாக வாழ்வானோ அவன் பரம்பொருளை உணருகிறான். (6/11)
கேள்வி : பகுத்தறிவால் ஏன் தர்மத்தைக் தெரிந்துகொள்ளக் கூடாது ஏன் சாஸ்திரம் தேவைப் படுகிறது
பதில் : ஐந்து வருடத்திற்கு முன்பு செரி என்று பட்ட விஷயம் இன்று சரியில்லை என்று நமக்குப் படுகிறது இவ்வாறு இருக்கையில் நம் பகுத்தறிவை எப்படி நம்புவது? (7/11)
கேள்வி : சாஸ்திரத்தை மேற்கொண்டு தெரிந்துகொள்ள என்ன ஆதாரம் உள்ளது?
பதில் : பகவத்கீதையில் கிருஷ்ண பகவான் சொல்கிறார்

तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ

எது தர்மம் எது அதர்மம் என்று சாஸ்திரத்தைக் கொண்டு தான் தெரிந்துகொள்ளவேண்டும். (8/11)
கேள்வி : என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ஒன்றும் புரியவில்லை எனக்கு?
பதில் : சாஸ்திரத்தின் மூலம் படித்துத் தெரிந்துகொள்வது அறிவு. அறிவுடன் தர்மம் ஒத்து வாழ்ந்தால் பலன் கடவுள் என்கிற பரம்பொருள். பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவோம் இதற்கு மோட்சம் என்று பொருள். (9/11)
கேள்வி : இதற்கு ஆதாரம் உள்ளதா?
பதில் : உள்ளது (10/11)
तत्रापरा ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्ववेदः
शिक्षा कल्पो व्याकरणं निरुक्तं छन्दो ज्योतिषमिति ।
अथ परा यया तदक्षरमधिगम्यते ॥ ५॥
வேதம்(ரிக், யஜுர், சாம, அதர்வண) மற்றும் ஆறு அங்கம் (ஸ்கிஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்) படிப்பதால் அபரா வித்யையை பயில்கிறான்(11/11)
यत्तदद्रेश्यमग्राह्यमगोत्रमवर्ण-
मचक्षुःश्रोत्रं तदपाणिपादम् ।
नित्यं विभुं सर्वगतं सुसूक्ष्मं
तदव्ययं यद्भूतयोनिं परिपश्यन्ति धीराः
பரம்பொருளை வர்ணித்து மேற்கொண்ட அறிவால் பரம்பொருளை அனுபவத்தின் மூலம் உணருகிறான் என்று பொருள் - முண்டகோபநிஷத்

More from All

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.

You May Also Like

The chorus of this song uses the shlokas taken from Sundarkand of Ramayana.

It is a series of Sanskrit shlokas recited by Jambavant to Hanuman to remind Him of his true potential.

1. धीवर प्रसार शौर्य भरा: The brave persevering one, your bravery is taking you forward.


2. उतसारा स्थिरा घम्भीरा: The one who is leaping higher and higher, who is firm and stable and seriously determined.

3. ुग्रामा असामा शौर्या भावा: He is strong, and without an equal in the ability/mentality to fight

4. रौद्रमा नवा भीतिर्मा: His anger will cause new fears in his foes.

5.विजिटरीपुरु धीरधारा, कलोथरा शिखरा कठोरा: This is a complex expression seen only in Indic language poetry. The poet is stating that Shivudu is experiencing the intensity of climbing a tough peak, and likening

it to the feeling in a hard battle, when you see your enemy defeated, and blood flowing like a rivulet. This is classical Veera rasa.

6.कुलकु थारथिलीथा गम्भीरा, जाया विराट वीरा: His rough body itself is like a sharp weapon (because he is determined to win). Hail this complete

hero of the world.

7.विलयगागनथाला भिकारा, गरज्जद्धरा गारा: The hero is destructive in the air/sky as well (because he can leap at an enemy from a great height). He can defeat the enemy (simply) with his fearsome roar of war.