#கோரக்கர் ஒரு சமுத்திரம். அவரின் குரு ஸ்ரீ #மச்சேந்திரநாதர் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக்

கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின்
கருணையாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டி உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார், இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார், கிடைத்தால் உண்பார் இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல் வனங்களின்
வழியாகவே தீர்த்த யாத்திரை செல்வார். ஒரு நாள் சிற்றூர் ஒன்றில் உள்ள ஒரு வியாபாரியின் வீட்டின் முன் நின்று நாராயணா என்று கூவினார். உள்ளே இருந்த வணிகனின் மனைவி அன்னத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் இவரது தோற்றத்தைக் கண்டு இவர் தெய்வாம்சம் பெற்றவர் என்று உணர்ந்தாள். பிறகு,
இவரை நோக்கி, சுவாமி! இந்த வீட்டில் குழந்தை விளையாடும் பாக்கியம் இருக்கிறதா? என்று கேட்டாள். அவளது ஏக்கத்தை உணர்ந்த அவர் அம்மணி, இந்த திருநீற்றை உட்கொண்டால் உங்களது பாக்கியம் நிறைவேறும். திருமாலின் அம்சமாக ஒரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி ஒரு சிட்டிகை திருநீற்றை கொடுத்தார். அதை
வாங்கி முந்தானையிலே முடிந்து வைத்துவிட்டு, வேலைகளைச் செய்யலானாள் அந்த அம்மாள். பிறரை கலந்தாலோசிக்காமல் அந்தத் திருநீற்றை உட்கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை. அண்டை வீட்டிலுள்ள தன் தோழியிடம் இதைப்பற்றிக் கூறினாள். அவளோ, யார் எதைக் கொடுத்தாலும் நம்பி விடலாமா? எத்தனையோ பரதேசிகள்
வருகிறார்கள். அவர்களெல்லாம் உண்மையான துறவிகள் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவர்களுள் ராவணச் சந்நியாசியும் இருக்கலாம் என்றாள், இவள் மனம் குழம்பிவிட்டது. எனவே விபூதியை அடுப்பில் போட்டுவிட்டாள். 12 ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் ஒருமுறை அந்த வீட்டின் முன் வந்து நாராயணா என்று கூறி
நின்றார் மச்சேரந்திரநாதர். முன் போலவே அவளும் பிச்சையிட வந்தாள். இவர் அவளைப்பார்த்து, அம்மா! முன்பு திருநீறு கொடுத்தேனே, அந்தக்குழந்தை ஸௌக்கியமா? என்றார். அவள் பயந்து போனாள். இவரோ, மகா தபஸ்வியாக இருக்கிறார். சபித்து விடுவாரோ என்றுபயந்து நடுங்கினாள். தயங்கியவாறே விஷயத்தை சொன்னாள்.
இவரோ, நடந்தது நடந்துவிட்டது. போகட்டும். சாம்பலை எங்கே கொட்டினாய்? என்று கேட்டார். அடுப்புச் சாம்பலைக் கொட்டிய குப்பைமேட்டைக் காட்டினாள். அவள் காட்டிய குப்பை மேட்டருகே சென்ற மச்சேந்திரர் சிறிது நேரம் மவுனமாக தியானித்துப் பிறகு, ஹம்ஸோவரம் என்று மும்முறை உச்சரித்தார். குப்பை
மேட்டுக்குள்ளிருந்து ஹம்ஸோவரம் என்று ஒலி எழும்பியது. உடனே ஆட்களை அழைத்து வெகு பத்திரமாக குப்பையை தோண்டும்படி கட்டளையிட்டார். அந்த குப்பைக்குழிக்குள் பன்னிரண்டு வயதுடைய சிறுவன் அமைதியாகத் தூங்குவது தெரிந்தது, கண்டவர் வியந்தனர். இந்தப்பிள்ளை காற்றும், நீரும், உணவும் இன்றி எப்படி
உயிர்பெற்று இதனுள் இருந்தான் என பேசினர். ஊர் முழுவதும் இதே பேச்சாகி விட்டது. மச்சேந்திரர் குழந்தையை மேலே எடுத்து அவயங்களை அசையச் செய்தார். இளைஞன் கை கால்களை உதறிக்கொண்டு எழுந்து நின்றான். இதற்குள் வணிகன் தன் மனைவியை நோக்கி, பெரியவர் பேச்சைக் கேட்காமல் அவசரப்பட்டுவிட்டாயே என்று
கடிந்தார். இருவரும் மச்சேந்திரர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தனர். அவர்களிடம் மச்சேந்திரர், உங்களுக்கு நல்லதொரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி, குப்பையிலிருந்து எழுந்த மகனை நோக்கி, மகனே! வருக, வருக என அழைத்துக்கொண்டு தமது யாத்திரையைத் தொடர்ந்தார். பூமியிலே பன்னிரண்டு ஆண்டுகள்
இருந்தாலும், பூமாதேவியால் காக்கப்பட்டதாலும் இவனுக்கு கோரட்சகர் என்ற பெயர் வழங்கலாயிற்று. காலப்போக்கில் இப்பெயர் கோரக்கர் என்று ஆயிற்று. இநத கோரக்கர் தான் கபீர்தாசருடன் வாதம் புரிந்தவர். தனக்கு உபதேசம் செய்யும்படி மச்சேந்திரரைக் கேட்க, அவர் உரிய காலம், நேரம் வந்ததும் யாமே செய்வோம்
என்றார். கோரக்கர் மிகுந்த சந்தோஷத்துடன் குருநாதரைப் பின் தொடர்ந்தார். அங்கே அழகிய காடுகளில் பர்ணசாலையில் முனிவர்கள் வசித்தனர். உபதேசம் பெறவும், சாஸ்திரங்கள் கற்கவும் மக்கள் இவர்களை நாடி வந்தனர். மச்சேந்திரர் ஓரிடத்தில் தங்காமல் சென்றுகொண்டே இருந்தார். கோரக்கர் தனது குருவிற்காக
அனைத்து பணிவிடைகளையும் செய்து, சகல சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்தார். ஒருநாள் மச்சேந்திரநாதர் கோரக்கரிடம், அடுத்துள்ள நகருக்குச் சென்று பிச்சை எடுத்துவா என்றார், கோரக்கரும் சென்றார். அங்கே ஒரு வீட்டிலே பூஜை நடந்து கொண்டிருந்தது. கருணை மிக்க அந்த வீட்டுப் பெண்மணி எல்லாவிதமான காய்
பட்சணங்கள், பாயசம் முதலியவைகளை உணவளித்தார். அதை ஏற்றுக்கொண்டு மிகுந்த ஆனந்தத்துடன் குருவை அடைந்தார். குருவும் மிகவும் திருப்திகரமாக சுவைத்துசுவைத்து சாப்பிட்டார். பிறகு நாளைக்கும் இதே வீட்டில் சென்று வாங்கிவா என்றார். கோரக்கர் கவலையுற்றார். ஒரு வீட்டில் தினமுமா விசேஷம் நடைபெறும்
என எண்ணியவராய் அடுத்தநாள் அந்த வீட்டிற்குச் சென்று, அம்மணி! நீங்கள் நேற்று அளித்த அமுதுவகைகள் மிகவும் திருப்தியளித்தன. என் குருவும் திருப்தியுடன் சாப்பிட்டார். இன்றும் அதுபோலவே வேண்டும் என்றார். அந்தப் பெண்மணி, நேற்று விசேஷ பூஜை நடந்தது. அதனால் பலவகை உணவளித்தேன். தினமும் அவ்வாறு
செய்ய முடியுமா? அரிசி வேண்டுமானால் வாங்கிப் போங்கள் என்றாள். இவரோ, அந்தச் சமையல்தான் வேண்டும் என பிடிவாதமாகக் கேட்டார். இதென்ன பிடிவாதம்? உன் குரு இல்லாததை கொடு என்றால் எப்படி கொடுப்பது? நல்ல குருநாதர்தான். அவர் உன்னிடம் உன் கண்ணைப்பிடுங்கிக் கொடு என்றால் கொடுப்பாயா? என்று கோபமாக
கேட்டாள். அதற்கு கோரக்கர், ஏன்? குருநாதர் கேட்டால்தான் கொடுப்பேனா? நீங்கள் கேட்டாலும் தருவேன். எனக்குத் தேவை என் குருநாதர் கேட்ட அதே அமுதுதான் என்றார். அப்படியானால் உன் கண்ணைக்கொடு, அமுது கொடுக்கிறேன் என்றாள் அந்தப் பெண் விளையாட்டாக. இவரும், ஓ! அப்படியே ஆகட்டும் என கண்ணைத் தோண்ட
ஆயுதம் தேடினார். இந்தபெண் சீடனது உறுதியைக் கண்டு, மீதியிருந்த பட்சணங்களுடன் அமுது கொடுத்தாள். கண்களை தோண்ட முயற்சித்ததால் கண்கள் புண்ணாகி இருந்தது. சீடனைக்கண்ட குரு, கண்களிலென்ன காயம் என கேட்க, கோரக்கர் நடந்தவைகளை அப்படியே சொன்னார். உடனே ‘‘கோரக்கா!! இப்படி ஒரு குருபக்தியா?’’
என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார். கோரக்கரும் பார்வை பெற்றார்.
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

More from அன்பெழில்

மகாகவி காளிதாசன் இயற்றிய அற்புத ஸ்லோகம் சியாமளா தண்டகம். தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார். கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை


உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம். பெறலாம்.
1.
மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், நீல மணியின் ஒளியுடன் கூடிய

அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் தியானம் செய்கிறேன்.
2.
சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

நான்கு கைகள் உடையவளும், தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும்,

நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும், குங்குமச் சிவப்பு மேனியுடையவளும், கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும் உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும் ஆன பராசக்தியான ஸ்யாமளா தேவியே! உனக்கு எனது நமஸ்காரங்கள்.
3.
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப
வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா
ஸூகப்ரியே

உலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும், ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும், எப்பொழுதும் மங்கள வடிவானவளும், கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும் மதங்க முனிவரின்
#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை


தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு

நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்

இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்


குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது
https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்
#திருநீரும்_ருத்திராட்சமும்
ஒரு ஊரில் இருந்த ஒரு திருடன், அவன் திருடாத இடமே இல்லை என்று மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர். அவன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம் என


அறிவித்தார். சில நாட்கள் கழித்து அந்த அரசர், யார் பற்று இல்லாமல் இருகிறார்களோ அவருக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என அறிவித்தார். பின் மந்திரியிடம் நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிப் பார்த்து அழைத்து வாரும் என ஆணையிட்டார். மந்திரி தேடி செல்லும்

போது இந்த திருடன் அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டான். மந்திரி ஒரு சூழ்ச்சி செய்தான். உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூறியுள்ளார். நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகிறேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கிறேன் என உறுதி அளித்தான். சரி என இந்த திருடனும்

சம்மதித்தான். அந்த திருடனுக்கு
திருநீறும் ருத்ராட்சமும் அணிவித்து ஒரு சன்யாசி போல் வேடமிட்டான் மந்திரி. பின் அவனிடம், நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இரு. ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல், கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை

வாங்கி என்னிடம் தா, நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன் என சொன்னான். பின் அந்த மந்திரி, ராஜாவிடம் சென்று, பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்துள்ள ஒரு சன்யாசியை கண்டுள்ளேன். அவரை தரிசித்து தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள் என்றான். அரசர் சென்று மரத்தடியில் இருந்த

More from All

Master Thread of all my threads!

Hello!! 👋

• I have curated some of the best tweets from the best traders we know of.

• Making one master thread and will keep posting all my threads under this.

• Go through this for super learning/value totally free of cost! 😃

1. 7 FREE OPTION TRADING COURSES FOR


2. THE ABSOLUTE BEST 15 SCANNERS EXPERTS ARE USING

Got these scanners from the following accounts:

1. @Pathik_Trader
2. @sanjufunda
3. @sanstocktrader
4. @SouravSenguptaI
5. @Rishikesh_ADX


3. 12 TRADING SETUPS which experts are using.

These setups I found from the following 4 accounts:

1. @Pathik_Trader
2. @sourabhsiso19
3. @ITRADE191
4.


4. Curated tweets on HOW TO SELL STRADDLES.

Everything covered in this thread.
1. Management
2. How to initiate
3. When to exit straddles
4. Examples
5. Videos on

You May Also Like