🌻ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய்🙏

183
🌻கரு உடை மேகங்கள் கண்டால் உன்னை கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய்🙏
184
🌻மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்-தம் இடம் புக்கு
கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய்🌻
185
🌻தெருவின்-கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமைசெய்யாதே
மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பீ உகந்து இவை சூட்ட நீ வாராய்🙏
186
🌻புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனை தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய்🙏
187
🌻எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்-கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப்பூ சூட்ட வாராய்🙏
188
🌻குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய்🙏
189
🌻சீமாலிகன்-அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் இருவாட்சிப்பூ சூட்ட வாராய்🙏
190
🌻அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில்கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கருமுகைப்பூ சூட்ட வாராய்🙏
191
🌻செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே🙏
ராதேகிருஷ்ணா 🙏🌻🙏

More from All

APIs in general are so powerful.

Best 5 public APIs you can use to build your next project:

1. Number Verification API

A RESTful JSON API for national and international phone number validation.

🔗
https://t.co/fzBmCMFdIj


2. OpenAI API

ChatGPT is an outstanding tool. Build your own API applications with OpenAI API.

🔗 https://t.co/TVnTciMpML


3. Currency Data API

Currency Data API provides a simple REST API with real-time and historical exchange rates for 168 world currencies

🔗 https://t.co/TRj35IUUec


4. Weather API

Real-Time & historical world weather data API.

Retrieve instant, accurate weather information for
any location in the world in lightweight JSON format.

🔗 https://t.co/DCY8kXqVIK

You May Also Like