நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று சொல்லப்பட்டது உத்திர பிரதேசத்தின் அமேதி தொகுதி. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி பின்னர் ராகுல் காந்தி என்று தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வென்ற தொகுதி அது. ஆனால் இப்போது யார் அந்த தொகுதி எம்பி?
2014 ல் பிஜேபி ஸ்மிரிதி இரானி என்ற நடிகையை அங்கு ராகுல் காந்திக்கு எதிராக களம் இறக்கியது. அந்த தொகுதிக்கு தொடர்பே இல்லாத நபர். 2014 ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ராகுல்காந்தியிடம் தோற்றார். ஆனால் அதன்பின் அமேதி தொகுதியை விட்டு போகவில்லை.
2019 தேர்தலின் போது ராகுல்காந்திக்கு தோல்வியை உறுதி செய்யும் வகையில் இருந்தது ஸ்மிரிதியின் தேர்தல் தயாரிப்புகள் ராகுல்காந்தி கேரள மாநிலத்திலும் போட்டியிட வேண்டி வந்தது. 2014 முதல் 2019 வரை ராகுல் காந்தியை தோற்கடிப்பது மட்டுமே ஸ்மிரிதி யின் ஒரே நோக்கமாக இருந்தது.
2019ல் அமேதி தொகுதியில் ராகுல் ஸ்மிரிதியிடம் தோற்றார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கோட்டை என்று சொல்லப்பட்ட அமேதி முதன் முதலாக பிஜேபி யிடன் வீழ்ந்தது. காரணம் ஸ்மிரிதி யின் 5 ஆண்டு உழைப்பு.
ஒரு தொகுதியில் வேட்பாளரை எப்படி இறக்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் பிஜேபிக்கு இணை இன்றைய தேதியில் இந்தியாவில் கிடையாது. இதை மற்ற கட்சிகள் அங்கீகரிப்பது இல்லை. அதனால் தான் ஒவ்வொரு மாநிலமாக பிஜேபியின் கரம் வலுப்பெற்று வருகிறது.