மகாபாரதத்தில் யயாதியின் கதை.
பிரகஸ்பதியின் மகனான கசன், அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகளான தேவயானி ஒரு சத்திரியனையே திருமணம் செய்து கொள்வாள் என்று சபித்திருந்தார். தேவயானியின் நெருங்கிய தோழி சர்மிஷ்டை. இவள் அசுரகுல மன்னன் விருசபர்வாவின் மகள் ஆவாள்.
இந்த அசுரகுல மன்னனுக்குச் சுக்கிராச்சாரியார் அரசகுருவாக விளங்கினார். தேவயானியும், சர்மிஷ்டையும் எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருந்தனர். எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்றனர். சர்மிஷ்டை செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்தாள்.
ஆனால் அசுரகுருவின் மகளான தேவயானியால் எளிய வாழ்க்கை மட்டுமே வாழ முடிந்தது.
ஒரு நாள் தேவயானியும் சர்மிஷ்டையும் ஆயிரம் சேடியர் துணைவர, ஆற்றில் குளிக்கச் சென்றனர். ஆற்றங்கரையில் தங்கள் உடைகளைக் களைந்து வைத்த பின்னர் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் நீரை வாரி அடித்தவாறு விளையாடினர். இன்னும் சில நீர் விளையாட்டுக்களையும் விளையாடினர். குளித்துக் களைத்தபின் கரைமேலிருந்த உடைகளை எடுத்து அணிந்துகொண்டனர். அப்போது சர்மிஷ்டை தற்செயலாகத் தேவயானியின் உடைகளை அணிந்து கொண்டாள்.
இதைப்பார்த்த தேவயானி ஆத்திரம் கொண்டாள். சர்மிஷ்டை பேராசையுடன் தன் ஆடைகளை உடுத்திக்கொண்டதாகக் குற்றம் சாட்டினாள்.
“என் ஆடைகளை உடுத்திக் கொண்டாளே! சர்மிஷ்டைக்கு எவ்வளவு ஆணவம்? யாகத்தில் இடவேண்டிய பாயாச பாத்திரத்தை நாய் தூக்கிக்கொண்டு போனது போல அல்லவா இது இருக்கிறது என பேச்சு முற்ற,