SriramKannan77 Authors கிருஷ்ணதாசன்

7 days 30 days All time Recent Popular
🌹🌺 “""" நண்பா... என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்ட நாத்திக நண்பன் - விளக்கும் எளிய கதை 🌹🌺
-----------------------------------------------------------------

🌺 சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள், செல்வா நாத்திகன், வாய்


ஜால திறமையுடைவன், சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வா மேடையில் பிரசங்கம் செய்வதோ, "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்பதே வேலை.

🌺எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாய் ஜால திறமையுடன்

சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான்.
🌺செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்று அழைத்தான்.

🌺அப்போது நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

🌺"நண்பா... என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் செல்வா.

🌺பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே

பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.தின்று முடித்த பின்பு நாத்திக நண்பனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

🌺"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு