🌹🌺 “""" நண்பா... என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்ட நாத்திக நண்பன் - விளக்கும் எளிய கதை 🌹🌺
-----------------------------------------------------------------

🌺 சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள், செல்வா நாத்திகன், வாய்

ஜால திறமையுடைவன், சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வா மேடையில் பிரசங்கம் செய்வதோ, "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்பதே வேலை.

🌺எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாய் ஜால திறமையுடன்
சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான்.
🌺செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்று அழைத்தான்.
🌺அப்போது நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

🌺"நண்பா... என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் செல்வா.

🌺பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே
பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.தின்று முடித்த பின்பு நாத்திக நண்பனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

🌺"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு
சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் செல்வா ஆங்காரத்துடன்.

🌺அதற்கு சிவா "கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள். செல்வா தலைகுனிந்து போனான்

🌺*பகவத்கீதை &
ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேதசாஸ்த்திரங்களை படிக்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான் பரம்பொருள் என எப்படி அறிய முடியும்.

🌺பலர் தவறான பாதையில் போக முக்கியமான காரணம் வேத சாஸ்த்திரங்களை படிப்பதில்லை, எனவே "நானே இறைவன்" என்றும் பிதற்றுகிறார்கள்.

🌺பலர் ஏமாற்றும் நபர்களிடம்
மாட்டிக்கொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பொற்பாதம் அடையாமல் மீண்டும் மீண்டும் ஜடவுலகிலேயே பிறவி எடுக்கிறார்கள்.

🌺நாமும் எப்போதும் பகவான் புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, வந்தனை செய்தபடி, பராந்தாமனை வழிபடுவோம் 🌹🌺

More from All

You May Also Like

This is NONSENSE. The people who take photos with their books on instagram are known to be voracious readers who graciously take time to review books and recommend them to their followers. Part of their medium is to take elaborate, beautiful photos of books. Die mad, Guardian.


THEY DO READ THEM, YOU JUDGY, RACOON-PICKED TRASH BIN


If you come for Bookstagram, i will fight you.

In appreciation, here are some of my favourite bookstagrams of my books: (photos by lit_nerd37, mybookacademy, bookswrotemystory, and scorpio_books)