SriramKannan77 Authors Shobitha 🇮🇳

7 days 30 days All time Recent Popular
*வைகுண்டம் எவ்வளவு தூரம்?*

மன்னன் ஒருவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. வைகுண்டம் என்று சொல்கிறார்களே, அது பூமியிலிருந்து எவ்வளவு தூரம்? என்பதே மன்னனின் சந்தேகம்.
அவையைக் கூட்டி சபையிலுள்ள பண்டிதர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய வரை, வைகுண்டம் 1

தூரத்தில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டனர்.
மன்னன் திருப்தி -யடையவில்லை.அப்போது சபையிலிருந்த விதூஷகன் எழுந்து,மகாராஜா! வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் உள்ளது என்றான்.
இதற்கு ஆதாரம் என்ன? என்று மன்னன் கேட்டான். உடனே விதூஷகன், கஜேந்திரன் எனும் யானையை முதலை பிடித்தபோது, ஆதிமூலமே 2

என்று அழைத்தது அந்த யானை. அதன் குரல் கேட்டு க்ஷண நேரத்தில் மகாவிஷ்ணு அங்கே தோன்றி, கஜேந்திரனைக் காப்பாற்றினார். இது உண்மை எனில், வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது என்பதும் உண்மைதானே? என்று பதிலளித்தான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமமே அவ்வளவு சக்தி வாய்ந்தது
ஹரி நாமத்தால் 3

காப்பாற்றப்பட்டவர்கள் பலர்‌.மன்னன் மனமகிழ்ந்து அவருக்குப் பரிசுகள் வழங்கினார்.எனவே கலியுகத்தின் தாரக மந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
என தினமும் 108 முறை இந்த திவ்யநாமங்களை ஜபம் செய்யவும். ஹரி‌ஹரி என்று ஏழு முறை சொல்லவும்.N